ஏசியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள்! – மருத்துவர்கள் எச்சரிக்கை!

ஏசியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் வறண்ட சருமம்,  ஆஸ்துமா போன்ற நோய்கள்  ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது.  குறிப்பாக, நாட்டின் வட மாநிலங்களில்…

ஏசியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் வறண்ட சருமம்,  ஆஸ்துமா போன்ற நோய்கள்  ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது.  குறிப்பாக, நாட்டின் வட மாநிலங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.  கோடை வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  டெல்லி,  பஞ்சாப்,  ஹரியானா,  ஒடிசா போன்ற பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வெப்ப அலை காரணமாக பொதுமக்கள் அனைவரும் மின்விசிறி,  ஏசி மற்றும்  குளிரூடி போன்ற கருவிகளை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.  குறிப்பாக ஏசியை 24 மணி நேரமும் பயன்படுத்தி வருகின்றனர்.  அதன் விளைவாக பல விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில்,  கடந்த வாரம் நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த குடியிருப்பில் இருந்த ஏசி வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.  மேலும்,  ஏசியை தொடர்ந்து பயன்படுத்தினால்,  தோல் மற்றும் சுவாச பிரச்னைகள் உள்ளிட்ட பல உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர்.

இதையும் படியுங்கள் : டி20 உலகக் கோப்பை: சூப்பர் ஓவரில் ஓமன் அணியை வீழ்த்தி நமீபியா அணி த்ரில் வெற்றி!

இது தொடர்பாக பெங்களூருவில் உள்ள மணிபால் மருத்துவமனையின் நுரையீரல் ஆலோசகர் கூறியதாவது :

“வெப்ப அலையிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் அதிகளவில் ஏசியை பயன்படுத்துகின்றனர்.  அதிக நேரம் ஏசி பயன்படுத்துவன் விளைவாக வறண்ட தோல், தலைவலி,  வறட்டு இருமல்,  தலைச்சுற்றல் மற்றும் குமட்டல்,  கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் சோர்வு வரை பல உடல்நலக் குறைவுகளை ஏற்படுத்தும்.  மேலும், ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களும் ஏற்படுத்தும்”

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.