அரசு பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம் செய்தபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த மாணவனை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கூடுதல் பேருந்து இயக்க மாணவனின் தாயார் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நிவேதன். இவர் அச்சரப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம் போல் செய்யூர் பகுதியில் இருந்து அச்சரப்பாக்கம் வரை செல்லும் தடம் எண் 19 பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசல் காரணமாக படியில் தொங்கிய படி பயணம் செய்த நிவேதன் நிலை தடுமாறி கீழே விழுந்தான்.
கீழே விழுந்த மாணவனை மீட்டு மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு இன்று மதியம் வீடு திரும்பினார். கீழே விழும் போது வாகனங்கள் எதும் பின்னால் வராததால் மாணவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மாணவனின் கை கால் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும்
மாணவனின் தாயார் தெரிவித்தார் மேலும் அவர் கூறுகையில் பள்ளிக்கு செல்லும் நேரத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் கூடுதல் பேருந்து இல்லாததால் தான் இந்த விபத்து நேர்ந்திருக்கிறது அதனால் அரசு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
பின்பு இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் காலை மற்றும் மாலை வேளையில் தடமேல் 19 கொண்ட அரசு பேருந்து ஒரே ஒரு பேருந்து வருவதாகவும் இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இங்கிருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் கூடுதல் பேருந்து இல்லாதது இதற்கு காரணம் உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் காவல்துறையினர் காலை மாலை பள்ளிக்குச் செல்லும் நேரங்களில் பேருந்து நிறுத்தத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்







