உக்ரைனில் ஆபத்தான ரசாயன உயிரியல் ஆயுத பரிசோதனை மையங்கள் அமெரிக்காவின் பங்களிப்போடு செயல்பட்டு வந்ததாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐ.நா துகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயார்க் நகரில் நடைபெற்றது இக்கூட்டத்தில் பேசிய ரஷிய நிரந்தர பிரதிநிதி வசிலி நெபென்சியா, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆதரவுடன் உக்ரைன் ராணுவத்தின் ரசாயன உயிரியல் ஆயுத தயாரிப்பு திட்டம் பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மைகளை கண்டறிந்துள்ளதாகவும், 30 உயிரியல் ஆய்வகங்களின் வலையமைப்பு இருப்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருப்பதாகவும் கூறினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய ஐக்கிய நாடுகளுககான அமெரிக்க பிரதிநிதி செர்ஜி, உக்ரைனிடம் ரசாயன உயிரியல் ஆயுத தயாரிப்பு திட்டம் ஏதும் இல்லை என்றும், அமெரிக்காவால் ஆதரிக்கப்படும் உயிரியல் ஆயுத ஆய்வகங்கள் எதுவும் உக்ரைனில் மற்றும் ரஷியாவின் எல்லைக்கு அருகில் இல்லை என்றும் மறுப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து இக்கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் டி.எஸ்.திருமூர்த்தி, உக்ரைனில் தற்போதைய நிலைமை குறித்து இந்தியா பலமுறை தீவிர கவலையை வெளிப்படுத்தி உள்ளதை சுட்டிக்காட்டினார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடக்கும் நேரடி பேச்சுவார்த்தைகளே போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என இந்தியா நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.









