டொரண்டோவில் நடைபெற்று வரும் பேஸ்பால் போட்டியின் நடுவே ”நாட்டு நாட்டு” பாடலுக்கு நடனம் ஆடியதால் மைதானமே உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.
இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்த ஆர்ஆர்ஆர் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ’நாட்டு நாட்டு’ பாடல் பல்வேறு விருதுகளை குவித்தது.
குறிப்பாக ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருது மற்றும் 95வது ஆஸ்கர் விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றது.

இதனால் ‘நாட்டு நாட்டு’ பாடலை மொழியை கடந்து உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். ஆஸ்கர் மேடையில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடியது வைரலானது. சமீபத்தில் டெல்லியில் மிகவும் பரபரப்பான பகுதியான சாந்தினி சவுக் என்கிற பகுதியில் ஜெர்மன் தூதகர அதிகாரிகளும் ஊழியர்களும் இணைந்து நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடினர். இந்த அசத்தலான நடன வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது . இதேபோல் பல்வேறு பிரபலங்களுக்கு இந்த பாடலுக்கு நடனமாடி அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் டொரண்டோவில் பேஸ்பால் போட்டி நடைபெற்று வருகிறது. டொரண்டோவின் உள்ள ரோஜர் சென்டர் மைதானத்தில் டொரண்டோ புளு டேய்ஸ் மற்றும் டெட்ராய்ட் டைகர்ஸ்-க்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் உலகப் புகழ் பெற்று ஆஸ்கார் விருதினை குவித்த “நாட்டு நாட்டு” பாடல் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு மைதானத்தில் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் நடன கலைஞர்கள் மாஸ்கட் உருவம் அணிந்த பொம்மைகளை அணிந்து நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.







