கேரள மாநிலம், பாலக்காடு அருகே யானை ஒன்று வீட்டின் பின்புறம் நுழைந்து நாய் கூண்டை சேதப்படுத்திய நிலையில் யானையை வனப்பகுதிக்கு விரட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம், பாலக்காடு அருகே புளியன்பள்ளி பகுதியில் உள்ள ஆதிவாசி காலனியில் வசிக்கும் ரெஜி என்பவரின் வீட்டின் பின்புறம் நுழைந்த காட்டு யானை ஒன்று, அங்கிருந்த நாய் கூண்டை சேதப்படுத்தியுள்ள நிலையில் அங்கிருந்த பலா காய்களை எடுத்து சென்றுள்ளது. தொடர்ந்து காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் அப்பகுதி மக்கள் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
–சே. அறிவுச்செல்வன்







