ஹை ஹீல்ஸ் (high heels) காலணி அணிந்து 100 மீட்டரை 12.82 வினாடிகளில் ஓடி ஸ்பெயின் வீரர் புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
ஹை ஹீல்ஸ் காலணி அணிந்து கொண்டு நடப்பது நம்மில் பலருக்கு சவால் நிறைந்த விஷயம். லேசாக தடுமாறினாலும் கீழே விழுந்து விழுவோம் என்பதில் சந்தேகமில்லை. ஹை ஹீல்ஸ் அணிய விருப்பப்படும் பல பெண்கள் கூட அதன் ஆபத்தை கண்டு அணியாமல் தவிர்த்து விடுவதும் உண்டு.
ஆனால் ஒருவர் ஹை ஹீல்ஸ் காலணி அணிந்து ஓட்டப்பந்தயம் ஓடியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? அதுவும் 100 மீட்டர் தூரத்தை 12.82 வினாடிகளில் கடந்தார் என்றால் ஆச்சரியமாக உள்ளதா? ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 34வயதான கிறிஸ்டியன் ராபர்டோ லோபஸ் ரோட்ரிக்ஸ் தான் அந்த சாதனைக்கு சொந்தக்காரர்.







