தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 6000க்கும் கீழ்!

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 6,000க்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 5,104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 6,000க்கும் கீழ் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 5,104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 21,027 பேர் குணமடைந்த நிலையில், 13 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் புதிதாக 839 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

புதிய பாதிப்பு-5,104
மொத்த பாதிப்பு-34,15,986
சிகிச்சையில்-1,05,892
உயிரிழப்பு-13
மொத்த உயிரிழப்பு-37,772

நேற்று, மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டிருந்த, அறிக்கையில், தமிழ்நாட்டில் புதியதாக 6,120 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட 23,144 பேர் குணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்றைக்கு முந்தைய நாள், தமிழ்நாட்டில் 7,000-க்கும் கீழ் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், நேற்று 7000-க்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.