குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய பிரதமர் மோடி பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டியுள்ளார்.
பிப் 1ம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை துவக்கி வைத்த போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இந்த உரையில் அரசு செய்த ஏராளமான சாதனைகளை அவர் குறிப்பிட்டு பேசினார்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று மக்களவையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, கொரோனா காலத்தில் விவசாயிகளின் பங்களிப்புகளை பற்றி பேசினார்.
மேலும் “இக்கட்டான காலத்திலும் விவசாயிகள் அயராது உழைத்ததால்தான் 80 கோடிக்கும் மேலானோருக்கு ரேசன் கடைகளில் இலவச அரிசி வழங்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா பொருளாதாரத்தில் அதிவேகத்தில் வளர்ந்து வருகிறது.
“மன்னும இமயமலை எங்கள் மலையே !
மாநில மீதிது போல் பிரிதில்லையே “ என்னும் பாரதியின் பாடலை குறிப்பிட்டார் பிரதமர்.மாநிலத்துக்கும் இடமில்லை
பாரதிக்குமிடமில்லை குடியரசு தின அணிவகுப்பில் என்பதை சொல்ல மறந்துவிட்டார். #பாரதி #Bharathi #Modi #RepublicDay #Parliament pic.twitter.com/6ErEug7TiC— Su Venkatesan MP (@SuVe4Madurai) February 7, 2022
முக்கியமாக விவசாயம், மெண்பொருள் மற்றும் பாதுகாப்பு துறைகளின் ஏற்றுமதியில் இந்தியா புதிய உச்சத்தை தொட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிவேகமாக கொரோனா பரவிய காலத்தில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை உலக நாடுகள் அனைத்துக்குமே முன்னோடியாக விளங்குகிறது என்று குறிப்பிட்டார்.
அதனுடன் தனது உரையில்‘மன்னும் இமயமலை எங்கள் மலையே பன்னரும் உபநிட நூல்எங்கள் நூலே பார்மிசை ஏதொரு நூலிது போலே பொன்னொளிர் பாரத் நாடெங்கள் நாடே போற்றுவதும் இதை எமக்கில்லை ஈடே’ என்ற பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டி பேசினார். தொடர்ந்து மக்களவையில் பேசிய அவர் அரசு செய்த திட்டங்கள் குறித்தும் அதனால் மக்கள் அடைந்த பயன்கள் குறித்தும் விரிவாக உரையாற்றினார்.
பிரதமரின் உரை குறித்து மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சனம் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








