இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு 10 ஆயிரத் கடந்துள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்தே வருகிறது. கடந்த சில காலமாகக் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் சில வாரங்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் இன்று மட்டும் 10,158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது நேற்றைய பாதிப்பான 7,830ஐ விட சுமார் 30 சதவீதம் அதிகமாகும். அதேபோல தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 45 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடாக, உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்தை தொடர்ந்து மத்திய அரசு அம்மாநிலங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதியது. மேலும், மருத்துவ உபகரணங்களை தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தையும், கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. தொடர்ந்து அசுர வேகத்தில் கொரோனா பாதிப்பு இப்படித் தொடர்ந்து மின்னல் வேகத்தில் பரவினால் அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம் என்பதால் பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
புதிதாகப் பரவ தொடங்கியுள்ள ஓமிக்ரான் XBB.1.16 வகை தான் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கக் காரணம் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். “ஆர்க்டரஸ்” (Arcturus) என்று அழைக்கப்படும் இந்த கொரோனா வகை தான் இப்போது நாட்டில் கொரோனா திடீரென அதிகரிக்கக் காரணமாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.







