ஐபிஎல் 2023; பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் பந்துவீச்சு தேர்வு

ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 16வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடக்கும் 18-வது லீக் ஆட்டத்தில்…

ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

16வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடக்கும் 18-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலியில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இரு அணிகளும் கடைசியாக விளையாடிய போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றிபெற தீவிரமாக முயற்சி செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

போட்டிக்கான இரு அணிகளின் வீரர்களின் பட்டியல்

பஞ்சாப் கிங்ஸ்  அணியில், பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, சிக்கந்தர் ராசா/பானுகா ராஜபக்சே, சாம் குர்ரான், ஷாருக் கான், ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர், நாதன் எல்லிஸ்/ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில்,விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, அல்சாரி ஜோசப், ஜோசுவா லிட்டில்  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.