தாயின் பெயரை இனிஷியலாக பயன்படுத்த குழந்தைகளுக்கு உரிமை உள்ளது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லியை சேர்ந்த ஒருவர், தனது மைனர் மகளின் ஆவணங்களில், தனது பெயரை இன்ஷியலாக பயன்படுத்த உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ரேகா முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரரின் வழக்கறிஞர், மனுதாரரின் மகள் மைனர் என்பதால், இதுபோன்ற விவகாரங் களில் அவரால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. கணவரை பிரிந்த மனைவி தனது மகளுக்கான ஆவணங்களில் அவர் பெயரை இன்ஷியலாக பயன்படுத்தி இருக்கிறார். சிறுமியின் பெயருடன் அவர் தந்தையின் பெயரையும் இணைத்து இன்சூரன்ஸ் செய்யப் பட்டுள்ளது. தாயின் பெயரை இன்ஷியலாக பயன்படுத்தினால், அதை பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று வாதிட்டார்.
விசாரித்த நீதிபதி, ‘தன் குழந்தையிடம் தனது பெயரைதான் பயன்படுத்த வேண்டும் என்று தந்தைக் கட்டாயப்படுத்த முடியாது. குழந்தை, தாயின் இன்ஷியலால் மகிழ்ச்சி அடைந்தால் உங்களுக்கு என்ன பிரச்னை? அனைத்து குழந்தைகளும் அம்மாவின் பெயரை இன்ஷியலாக பயன்படுத்தலாம். அதற்கான உரிமை இருக்கிறது.
தேவைப்படும் இடத்தில் குழந்தையின் பள்ளிச் சான்றிதழில் உள்ள தந்தை பெயரை காண்பிக்கலாம்’ என்று கூறி மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.







