தமிழ்நாட்டில் வரும் 9ம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என உயர் கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, தமிழ்நாடு உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள உத்தரவில், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், கல்லூரிக் கல்வி இயக்ககம், பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் பணியாற்றும் அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்கள் வரும் 9-ம் தேதி முதல் கல்லூரிகளுக்கு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அனைத்து வேலைநாட்களிலும் கல்லூரிக்கு வருவதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தவறாமல் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர் கல்வித்துறை உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







