மலேசியாவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் திருவொற்றியூர் சிலம்பம் வீரர்கள் தங்கம் பதக்கம் வென்ற நிலையில் அவர்களுக்கு ஊர் பொதுமக்கள் மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மலேசியா கோலாலம்பூரில் ஆகஸ்ட் 26 மற்றும் 27ல் நடைபெற்ற மலேசியா போர்க்கலை சிலம்பம் அமைப்பு நடத்திய உலக அளவிலான சிலம்பப் போட்டியில் மலேசியா தாய்லாந்து இந்தோனேசியா சிங்கப்பூர் வியட்நாம் மற்றும் இந்தியா நாடுகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகளில் ஒரு மாணவருக்குத் தனித்திறமை மற்றும் தொடு முறை போட்டிகள் என இரு விதமான போட்டிகள் நடைபெற்றது இதில் இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்த சிலம்ப ஆசான் சண்முகம் தலைமையில் திருவொற்றியூர் யுத்த வர்ம சிலம்ப போர்க்கலை அகாடமி விளையாட்டு சங்க சிலம்பப் பள்ளியின் 19 மாணவர்களும் 3 மாணவிகளும் என மொத்தம் 22 பேர் 44 போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாணவ மாணவிகள் 18 தங்கப்பதக்கம் 17 வெள்ளி பதக்கம் மற்றும் மூன்று வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். இப்போட்டியில் சாம்பியன் பட்டத்தில் முதலிடம் மலேசியாவிற்கும் இரண்டாவது இடம் இந்தியா தமிழ்நாட்டிற்கும் கிடைத்தது.
போட்டியில் வெற்றி பெற்ற சிலம்ப மாணவ மாணவியர்கள் இன்று 29 காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்து மெட்ரோ இரயில் மூலம் திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் வருகை தந்தவர்களை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் திருவொற்றியூர் மண்டல தலைவர் திமு தனியரசு ஆகியோர் வரவேற்று அவர்கள் பெற்ற வெற்றிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து வெற்றி பெற்ற விளையாட்டு சிலம்பம் வீரர்கள் அனைவரையும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அழைத்துச் சென்று அவரிடம் வாழ்த்து பெற உள்ளதாகவும தெரிவித்தார் தொடர்ந்து ஊர்வலமாக திருவொற்றியூர் அருள்மிகு வடிவுடையம்மன் ஆலயம் முன்பாக சிலம்பம் வீரர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஊர்வலமாக சென்று இறை வணக்கம் செய்தார்கள். இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் சுரேஷ் செயலாளர் ஆசான் சண்முகம் பொருளாளர் அனுராதா மேலாளர் கிஷோர் இணைச் செயலாளர் பாஸ்கராவ் உள்ளிட்டவர்களுடன் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.







