ராமேஸ்வரத்தில் நள்ளிரவு வீசிய சூறைக்காற்று காரணமாக துறைமுகம் பகுதியில்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி படகுகள் சேதமடைந்துள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 750க்கும்
மேற்பட்ட விசைப்படகுகள் ஈடுபட்டு வருகிறது. வட கிழக்கு பருவமழை மற்றும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் ஏற்படும் புயல் மற்றும் சூறாவளி காற்று காரணமாக ஒவ்வொரு ஆண்டும் படகுகள் சேதமடைந்து வருகிறது. படகுகளை பாதுகாப்புடன் நிறுத்தும் வகையில் தூண்டில் வளைவு துறைமுகம் அமைத்து தர வேண்டும் என்று தொடர்ந்து மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில், இன்று அதிகாலையில் வீசிய சூறாவளி காற்று காரணமாக சுமார்
ஜோஸ்வா, கென்னடி, அந்தோணிராஜ், கிருபை, இன்ரைசன், சவரிமுத்து உள்ளிட்டவர்களின் விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி 7 விசைப்படகுகள் சேதமடைந்தது. மேலும் ஐந்து விசைப்படகுகள் நங்கூரத்துடன் கரை ஒதுங்கியதை படகுகளை மீனவர்கள் சேதம் என்று மீட்டனர்.

இதில் சேதமடைந்த ஏழு படங்களுக்கும் ஒவ்வொரு படங்களும் குறைந்தபட்சமாக ₹50,000 முதல் 2 லட்சம் வரை செலவாகும் என மீனவ சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து மீனவ சங்க தலைவர் சகாயம் கூறுகையில், ராமேஸ்வரம் மீன் பிடித்து
குடும்பத்தில் சுமார் 5000 மீனவர்களுடைய வாழ்வாதாரமாக இருக்கக்கூடியது.
மீன்பிடி தொழில் ஒவ்வொரு ஆண்டு காலத்திலும் நவம்பர் டிசம்பர் காலங்களில்
ஏற்படும் சூறைக்காற்று காரணமாக பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால்
மத்திய, மாநில அரசும் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தை பாதுகாப்பான
தூண்டில் வளைவு துறைமுகம அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் சேதமடைந்த படகுகளை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.







