சென்யார் புயல் – இந்தோனேசியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 900ஆக அதிகரிப்பு!

சென்யார் புயலால் இந்தோனேசியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 900-ஐ கடந்தது.

ஆசியாவில் அமைந்துள்ள இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா, அச்சோ ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்தோனேசியாவில் இந்தோனேசியாவில் ‘சென்யார்’ புயலால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது.

மேலும் 410 பேர் மயமாகியுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த வாரத்தில் இந்தோனேசியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் முழுவதும் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளில் 1,790 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.