பிபர்ஜாய் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரை பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. .
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘பிபர்ஜாய்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது குஜராத் மாநிலம் கட்ச் அருகே கரையை கடக்கும் எனறும், பின்னர் பாகிஸ்தானை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டது. இந்த புயல் வலுவிழந்து தற்போது கராச்சியில் இருந்து 380 கிலோமீட்டர் தெற்கே நிலை கொண்டுள்ளது.
புயல் கரையை கடக்க உள்ள நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரை பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குஜராத் மற்றும் கராச்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புயல் காரணமாக குஜராத்தின் கட்ச்- சவுராஷ்டிரா மாவட்டங்களில் கடற்கரையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.கடற்கரையை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், இந்திய கடலோர காவல்படையின் கப்பல்கள் குஜராத் கடற்கரையில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே கொட்டி தீர்த்த மழையால் பெரும்பாலான வீடுகள், மின்கம்பங்கள் கடும் சேதம் அடைந்துள்ளது. பேருந்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. .






