கொரோனா உறுதியான நபருடன் தொடர்பு: 2 வது டெஸ்ட்டில் இருந்து ஆஸி. கேப்டன் விலகல்

கொரோனா தொற்று உறுதியானவருடன் தொடர்பு கொண்டதால், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் இன்றைய 2 வது டெஸ்ட் போட்டியில் அவர் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இங்கிலாந்து அணி…

கொரோனா தொற்று உறுதியானவருடன் தொடர்பு கொண்டதால், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் இன்றைய 2 வது டெஸ்ட் போட்டியில் அவர் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் இன்று பகலிரவு போட்டியாக நடக்கிறது.

இந்நிலையில் நேற்றிரவு உணவு விடுதி ஒன்றில், பேட் கம்மின்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு பக்கத்து டேபிளில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பாதிப்பு இல்லை என்று தெரியவந்தாலு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேட் கம்மின்ஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அதே உணவகத்தில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான் ஆகியோரும் இருந்தனர். ஆனால் அவர்கள் வெளியே வொறொரு டேபிளில் இருந்ததால் அவர்கள் விளையாட அனுமதிக்கப் பட்டுள்ளது.

இதனால், இன்று நடக்கும் 2 வது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.