தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து, 2 கார்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த இரு மாதங்களில், இதுபோன்ற பெரு விபத்து நடைபெறுவது நான்காவது முறை. பலமுறை வலியுறுத்தியும் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளாததே இம்மாதிரியான விபத்துகளுக்குக் காரணம். ஆளும் திறனற்ற அறிவாலயம் அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
அரசுப் பேருந்துகளின் மேற்கூரை சேதமடைந்து மழைநீர் ஒழுகுவது, பயன்படுத்த முடியாத படிகளுடன் பேருந்துகளை ஓட்டுவது, பேருந்துகளே இல்லாமல் பயணிகள் அவதியுறுவது என அலட்சியத்துடன் பொதுமக்கள் உயிரில் விளையாடும் திமுக அரசின் மீது கடுங்கோபத்தில் உள்ள தமிழக மக்கள் திமுகவை ஆட்சி அரியணையிலிருந்து இறக்காமல் விடமாட்டர்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







