முக்கியச் செய்திகள் தமிழகம்

மீண்டும் தலைதூக்கும் தனியார் லோன் வங்கிகள் – உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி சேட்டை

சூலூரில் கல்லூரி மாணவர் ஒருவர் உடனடி லோன் வழங்கும் ஆன்லைன் அப்ளிகேஷன் மூலம் பணம் பெற்று அதனை திரும்ப செலுத்திய நிலையிலும், பணம் தரவில்லை என சம்மந்தப்பட்ட தனியார் வங்கி மாணவனின் உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் யோகேஸ்வரன். இவர் இருசக்கர வாகனம் வாங்குவதற்காக ஆன்லைனில் உடனடியாக பணம் பெறும் லோன் அப்ளிகேஷன்களில் 20 ஆயிரம் ரூபய் பணத்தை பெற்றுள்ளார். மூன்று தவணையாக அந்த பணத்தை கட்டி விடலாம் என்று அந்த அப்ளிகேஷன் தரப்பிலிருந்து கூறியுள்ளனர். இதனையடுத்து தனது பான் கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்கு விவரங்களையும் அந்த அப்ளிகேஷனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இதையடுத்து, யோகேஸ்வரன் வங்கி கணக்கிற்கு உடனடியாக 20 ஆயிரம் ரூபாய் பணம் வந்துள்ளது. முதல் தவணையாக அவர் 3,500 ரூபாய் பணத்தை அந்த குறிப்பிட்ட அப்ளிகேஷன் கொடுத்துள்ள வங்கி முகவரிக்கு அனுப்பி உள்ளார். ஆனால் அப்ளிகேஷன் தரப்பிலிருந்து வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு பணம் குறிப்பிட்ட நேரத்தில் செலுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளனர். அதற்கு யோகேஸ்வரன் பணத்தை செலுத்தி விட்டதாக பதிலளித்துள்ளார். ஆனால் பணத்தை செலுத்தவில்லை என கூறி யோகேஸ்வரனின், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் கைப்பேசி எண்களுக்கு தனியார் லோன் நிறுவனம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்கள் இதுகுறித்து யோகேஸ்வரனிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் அந்த அப்ளிகேஷனை தொடர்புகொண்டு யோகேஸ்வரன் கேட்ட போது பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த யோகேஸ்வரன் சூலூர் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

அண்மை காலமாக தனியார் லோன் நிறுவனங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருந்த நிலையில், மீண்டும் பணத்தை கேட்டு தவறான வழிகளில் செயல்படுவது தொடங்கியுள்ளதாக வேதனை தெரிவித்த சமூக ஆர்வலர்கள் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பட்டப்பகலில் பரபரப்பு.. வங்கியில் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.19 கோடி கொள்ளை!

Ezhilarasan

முதலமைச்சர் நிவாரண நிதி: ஒரு மாத ஊதியத்தை அனுப்பிய அன்புமணி ராமதாஸ்!

Halley Karthik

தமிழகத்தில் 35 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

Halley Karthik