முக்கியச் செய்திகள் இந்தியா

ராஜினாமா கடிதம் தயார்…நேரில் சந்திக்க தயாரா?…

நான் ராஜினாமா கடிதத்தை தயாராகவே வைத்திருக்கிறேன். ஆனால் அதனை நேரில் வந்து பெற்றுக் கொண்டு ஆளுநரிடம் கொடுக்கத் தயாரா? என மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்ரே சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சவால் விடுத்துள்ளார். 

மாநிலங்களவை தேர்தலுக்குபின் மீண்டும் மகராஷ்டிராவில் அரசியலில் புயலை கிளப்பியுள்ளது சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களின் போர்க்கொடி. பால்தாக்ரே விரும்பிய இந்துத்துவா ஆட்சியை ஏற்படுத்துவோம் என சூளுரைத்தபடியே, 33 சிவசேனா எம்.எல்.ஏக்கள் மற்றும் 7 சுயேட்சை எம்.எல்.ஏக்களுடன் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள லீ மெரிடியன் நட்சத்திர ஓட்டலில் முகாமிட்டுள்ளார் சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில்  கொரோனாவால் பாதிப்பட்டுள்ளார் அம்மாநில் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே. தன்னை தனிமைக்கொண்டிருந்தபடியே நிலைமையை சமாளித்து வரும் அவர், இது குறித்து  கருத்து தெரிவிக்கும்போது, தனக்கு எதிராக திரும்பியுள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை ஒரு பிரச்சனை இல்லை என்றார். தனக்கு எதிராக உண்மையிலேயே திரும்பியுள்ளவர்கள் எத்தனை பேர் என்பதுதான் தற்போது பிரச்சனை என்றும் அவர் கூறினார். கூட்டணி கட்சியினர் தம் மீது முழு நம்பிக்கை வைத்துள்ள நிலையில், சொந்தக்கட்சி எம்.எல்.ஏக்கள் தன்னை எதிர்ப்பதாக வெளியாகியுள்ள தகவல்தான் தம்மை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளதாக உத்தவ் தாக்ரே கூறினார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் தம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டு, முதலமைச்சர் பதவியில் தொடரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக கூறினார். இந்துத்துவா கொள்கையை சிவசேனா ஒருபோதும் கைவிடாது எனக் கூறிய உத்தவ் தாக்ரே, தமக்கு எதிராக குரல் கொடுப்பதாக கூறப்படும் எம்.எல்.ஏக்கள் தலைமறைவாக இருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். தான் ராஜினாமா கடிதத்தை எழுதி தயாராகவே வைத்திருப்பதாகக் கூறிய அவர், தம்மை எதிர்க்கும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தம்மை நேருக்கு நேர் சந்தித்து தம் மீது நம்பிக்கை இல்லை என முகத்தை பார்த்து கூறத்தயாரா எனக் கேள்வி எழுப்பினார். அவ்வாறு கூறுபவர்களிடம்,  தான் ராஜினாமா கடிதத்தை கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர்களே நேரிடையாக சென்று ஆளுநரிடம் அதனை கொடுக்கட்டும் என்றும் உத்தவ் தாக்ரே தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா தடுப்பூசி விநியோகம்: பணக்கார, ஏழை நாடுகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வு!

Ezhilarasan

சிறுமியின் கருமுட்டை விற்பனை; மேலும் ஒருவர் கைது

Arivazhagan CM

பனிப்பாறைகள் ஒரே நேரத்தில் உருகினால் என்னவாகும்?

Gayathri Venkatesan