கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் எப்போது இடைத் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்; எல். முருகன் தகவல்!

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் அதனை சந்திக்க பாஜக தயாராக உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். நாகர்கோவில் அருகே உள்ள வடசேரியில் நடந்த பாஜக நிர்வாகிகள்…

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் அதனை சந்திக்க பாஜக தயாராக உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் அருகே உள்ள வடசேரியில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த திமுக ஆட்சியில் அக்கட்சியின் நிர்வாகிகளால் செய்யப்பட்ட நில அபகரிப்பு குற்றங்களுக்காகவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தனிப்பிரிவை உருவாக்கியதாகக் குறிப்பிட்டார்.

திமுக ஆட்சியில், மின்தடை, விவசாயிகள் பிரச்னை போன்ற பிரச்சனைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதால், வரும் தேர்தலில் அந்த கூட்டணி தோற்கடிக்கப்படுவது உறுதி என எல். முருகன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply