பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் கெரபாரி கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று வேன் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்த நபர்களை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிதிஷ் குமார் ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக அறிவித்து உள்ளார்.
இந்த விபத்து குறித்து போலீசார் கூறுகையில், “விபத்து நடந்த பொது சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தார்கள். சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர்களில் 5 பேர் அதில் பலனின்றி உயிரிழந்தனர். அடுத்தடுத்து நடந்த விபத்தில் 2 இருசக்கர வாகனங்களும் சிக்கி கொண்டன. எனினும், பேருந்து ஓட்டுநர் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதற்கான சான்று எதுவும் இல்லை. ஜார்கண்டில் இருந்து சொந்த ஊருக்கு 40 பேர் வரை வேனில் திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.







