ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் நாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக சகபவா 35 ரன் களும், நகர்வா 34 ரன்களும்,எவன்ஸ் 33 ரன் களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சஹர், கிருஷ்ணா மற்றும் அக்சர் பட்டேல் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 30.5 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷிகர் தவன் 81 ரன்களுடனும், சுப்மன் கில் 82 ரன்களும் அடித்து அசத்தினர்.
3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியிலேயே இந்திய அணி வெற்றி பெற்றதால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் தற்போதைய வெற்றியால் இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகத் தெரிகிறது.







