கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு கடையில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை வருவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கள்ளக்குறிச்சி அருகே உள்ள சங்கராபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடையில் திடீரென தீ பற்றியது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த பட்டாசுகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.
பட்டாசுகடையில் பற்றிய தீ அருகிலுள்ள பேக்கரியிலும் மளமளவென்று பரவியது. மேலும் அங்கிருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இதனால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இந்த விபத்தில் தீயில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இத்தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ பற்றியதற்கான காரணம் ஏதும் தெரியவில்லை.
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து; 4 பேர் பலிhttps://t.co/CnV8a4gCkW | #Fireworks | #Accident | @collector_kki | @kallakurichidt pic.twitter.com/sWXhzIiBCD
— News7 Tamil (@news7tamil) October 26, 2021







