ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகிறது.
சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் மோஷன் போஸ்டர் மற்றும் லிரிக்கல் பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. படம் தீபாவளி அன்று
இதற்கு முன்னர் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால், இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.







