அமமுக கொள்கைபரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்து வணங்கினார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி சி.ஆர்.சரஸ்வதிக்கு சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த பகுதியில் அமமுக கொள்கைபரப்புச் செயலாளர் சி.ஆர். சரஸ்வதியை பார்த்தவுடன் வாகனத்தை நிறுத்தி இறங்கி வந்து சந்தித்து உரையாடினார். முதலமைச்சருடனான சந்திப்பு குறித்து சி.ஆர் சரஸ்வதியுடன் நியூஸ் 7 தமிழ் சென்னை மண்டல தலைமை செய்தியாளர் தேவா இக்னேசியஸ் சிரில் நடத்திய நேர்காணலில் தெரிவித்ததாவது..
” கிண்டிக்கு சென்று விட்டு திரும்பும்போது முதலமைச்சரை பார்த்து வணக்கம் சொன்னேன். உடனடியாக முதலமைச்சர் வாகனத்தை நிறுத்தி சந்திப்பதற்கு வருவார் என சத்தியமாக எதிர்பார்க்கவில்லை, பெரிய விசயம். முதலமைச்சரை பார்த்திருக்கிறேனே தவிர பழக்கம் கிடையாது.
இந்த பகுதியின் பிரச்னைகளை கூறியவுடன் கண்டிப்பாக சரிசெய்து தருவதாக முதலமைச்சர் என்னிடம் கூறினார். முதலமைச்சரை சந்தித்தது பெரிய அதிர்ச்சியாக உள்ளது. ஜெயலலிதாவிடம் இருந்ததால் நான அனைவராலும் அறியப்படுகிறேன். மக்களை முதலமைச்சர் சந்திப்பது நல்ல விசயம்; அனைவருக்கும் பலனளிக்கும்.
முதலமைச்சர் எங்கள் பகுதிக்கு வருவது முன்பாகவே எனக்கு தெரியாது. முதலமைச்சருடனான சந்திப்பு Surprise, Shocking, மற்றும் சந்தோசம். அரசியல் என்பது வேறு, அரசியலில் ஆயிரம் இருக்கலாம். முதலமைச்சர் இறங்கி வந்து மக்களிடம் பேசுவது ஆரோக்கியமான அரசியல்” என சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார்.
இதன் முழு காணொலியை காண







