அனைத்துலக சிறந்த படைப்பாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எழுதிய “வீரயுகநாயகன் வேள்பாரி” நாவல் தேர்வு!

அனைத்துலக சிறந்த படைப்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுதிய “வீரயுகநாயகன் வேள்பாரி” நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மலேசியாவின் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறிவாரியத்தின் சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை “அனைத்துலக…

அனைத்துலக சிறந்த படைப்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுதிய “வீரயுகநாயகன் வேள்பாரி” நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவின் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறிவாரியத்தின் சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை “அனைத்துலக சிறந்த படைப்பு”க்கான விருது வழங்கப்படும். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான விருது, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர், சு. வெங்கடேசன் எழுதிய “வீரயுக வேள்பாரி” நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நாவலுக்கு மலேசியாவில் பெரும் வாசகர் வட்டம் இருப்பதும், மலேசிய பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிப் புலனத்தின் பாடநூலாக இந்த நாவல் பயிற்றுவிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா பெருந்தொற்று காலமாக இருப்பதால் விருது விழா நடத்த முடியாத சூழல் நிலவுவதாகவும், அதன் காரணமாக விருது தொகையான 7 லட்சம் ரூபாய் ஆசிரியருக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply