கர்பிணிப் பெண்களும் இனி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய மருத்துவக் கவுன்சில் இயக்குநர் ஜெனரல் மருத்துவர் பல்ராம் பாகவா கூறியதாவது;
கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி மிகவும் பயனிக்கக் கூடியது. அவசியம் அதை அவர்கள் போட்டுக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடலாமா என்பது குறித்து 2 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்த ஆய்வு முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளிவரும். மிகவும் சிறிய வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடலாமா என்பது குறித்து இன்னும் ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறினார். பெரும் அளவில் குழந்தைகளுகுக தடுப்பூசி போட இயலாத சூழல் உள்ளது. இது வரை ஒரே ஒரு நாடு மட்டும்தான் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு வருகிறது. இவ்வாறு இந்திய மருத்துவக் கவுன்சில் இயக்குநர் ஜெனரல் மருத்துவர் பல்ராம் பாகவா கூறினார்.







