தமிழ்நாட்டில் இவ்வளவு பேர் தடுப்பூசி செலுத்தவில்லையா?

தமிழகத்தில் 54 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.4 கோடி பேர் 2ம் தவணை தடுப்பூசியும், செலுத்தவில்லை என் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. கடந்த…

தமிழகத்தில் 54 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.4 கோடி பேர் 2ம் தவணை தடுப்பூசியும், செலுத்தவில்லை என் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. கடந்த வாரத்தில் 25க்கும் கீழ் இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை சில நாட்களாக 30 ஆக பதிவாகி வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுக்க பல மாநிலங்களில் கொரோனா தொற்று பரவலானது அதிகரித்துள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “12 – 14 வயதுடையோர், 15 – 18 வயதுடையோர், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள், வயதானவர்கள் என பல தரப்பினர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் முன்களப்பணியாளர்கள், இணை நோய் உள்ளவர்கள், வயதானவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் கொரோனா தொற்று எண்ணிக்கையும், அதன் தாக்கமும் குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிப்பதாகவும், இதனால் அரசு 100% தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்காக செயல்பட்டு வருகிறது எனவும் குறிப்பிட்டது சுகாதாரத்துறை.
தற்போது வரை தமிழகத்தில் 54.71 லட்சம் பேல் முதல் தவணை  தடுப்பூசியும், 1.4 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தாமல் உள்ளனர்.

தற்போது சுகாதாரத் துறையிடம் 1.29 கோடி டோஸ் கையிருப்பில் உள்ளது .இதனால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது. அதுபோலவே முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டுமென கூறியுள்ளது.

பரசுராமன், மாணவ ஊடகவியலாளர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.