தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு என்பதால், சென்னை சிந்தாதிரிபேட்டை மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக தமிழக அரசு சார்பில் கடந்த 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து உள்ளது. மேலும், நாளை முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகமெங்கும் இறைச்சிகடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹோட்டல்களில் பார்சல் வாங்க மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று சென்னை சிந்தாதிரி பேட்டை மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலை மோதியது. மீன்பிடி தடை காலம் என்பதால் மீன்களின் வரத்து குறைவாக உள்ளது. இதனால் மக்கள் அதிகாலையிலேயே வந்து ஆர்வத்துடன் மீன் வாங்கிச்சென்றனர்.







