கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் இதுவரை 63.25 லட்சத்திற்கும் அதிகமானவர்களை பலிவாங்கியுள்ளது. ஆனால் இதைவிட அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் அபாயத்தை தடுப்பூசி தடுத்து நிறுத்தியுள்ளதாக அறிவியல் ஆய்விதழ் தெரிவித்துள்ளது.
கடந்த 2019ல் தொடங்கிய கொரோனா தொற்று பரவத்தொடங்கியது. மனித இனம் எதிர்பாரத இடர்பாடுகளை இந்த தொற்று பாதிப்பின் மூலம் எதிர்கொண்டது. ஒருபுறம் உயிரிழப்புகளும், மறுபுறம் தனிமைப்படுத்திக்கொள்ளுதல், வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை, வேலையிழப்பு, வருமானம் இல்லாமை, வறுமை, பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட சிக்கல்களையும் எதிர்கொண்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்த தொற்று பாதிப்புக்கு எதிரான தடுப்பூசியை கண்டறிய ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடர்ந்து முயன்றதையடுத்து தடுப்பூசிகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்க வந்தன. பல்வேறு நாடுகள் இந்த தடுப்பூசியை இலவசமாக வழங்கின. 2019ல் தொடங்கி தற்போது வரை ஏறத்தாழ 63,25,993 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் இது எதிர்பார்த்ததைவிட 3ல் 1 பங்குதான். ஒருவேளை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால் இந்த உயிரிழப்பு இந்நேரம் 150 கோடியை கடந்திருக்கும். ஆனால் இவற்றை தடுத்து நிறுத்தியது தடுப்பூசிதான் என Lancet Infectious Diseases ஆய்விதழ் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவ தொடங்கிய நிலையில் டிச.8, 2020ல் தடுப்பூசி முதன் முதலில் பயன்பாட்டுக்கு வந்தது. அப்போதிலிருந்து ஒரு வருடம் கழித்து அதாவது டிச.8,2021 வரை இந்த தடுப்பூசி 185 நாடுகளை சேர்ந்த 20 மில்லியன்(150 கோடி) மக்களின் உயிரை காப்பாற்றியுள்ளது என்றும் ஆய்விதழ் கூறியுள்ளது.
தற்போது உலகம் முழுவதும் 54,21,04,149 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12.02 பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், தடுப்பூசி செலுத்துதலில் 3வது இடத்திலும் உள்ளது. இந்தியா இரண்டிலும் 2ம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.