முக்கியச் செய்திகள் தமிழகம்

சாலையில் சென்ற கார் தீயில் எரிந்து நாசம்

சென்னை மாதவரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றியதில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

சென்னை மாதவரம் பகுதியில் வசித்து வருபவர் செழியன். இவர் விருகம்பாக்கத்தில் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் பணியை முடித்து விட்டு வீட்டிற்கு சுமார் 12 மணியளவில் காரில் வந்து கொண்டிருந்தார். கார் மாதவரம் ரவுண்டானா அருகே நள்ளிரவில் வந்த போது திடீரென காரின் முன்பக்கத்திலிருந்து புகை வருவதைக் கண்டு கீழே இறக்கி பார்ப்பதற்குள் தீ பற்றி கார் எறிய தொடங்கியது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த சம்பவம் குறித்து மாதவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:

Related posts

நேதாஜி உருவப்படத்தை ரூபாய் நோட்டுக்களில் அச்சடிக்க கோரிய மனு!

Niruban Chakkaaravarthi

அசையா சொத்துகளை விற்க ஏர் இந்தியா முடிவு!

கொரோனா மரணங்களை அரசு வெளிப்படையாக அறிவிக்க சோனியா கோரிக்கை

Saravana Kumar