தென்காசியில் வளர்ப்பு பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காசிநாதபுரம் அரசு பள்ளி தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் பயிரிட்டு உள்ளனர். தற்போது நெல் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் அப்பகுதியில் சிலர் பன்றி வளர்த்து வருகின்றனர்.
இதனால் பன்றிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எங்களால் விவசாயம் செய்ய முடியவில்லை விவசாயம் செய்வதற்கு பதிலாக வேறு வேலை செய்துவிடலாம் என்று விவசாயிகள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
இதனால், விவசாயிகள் நலன்களை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காசிநாதபுரம் அரசு பள்ளி தெருவில் சிலர் பன்றிகள் வளர்த்து வருகின்றன. பன்றி குட்டிகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வயல்களில் இறங்கி அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களைத் தொடர்ந்து நாசம் செய்து வருகின்றன, நெற்பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் சிலர் வயல்களைச் சுற்றி வளையமைத்து இருந்தாலும் அந்த வலைகளையும் சேதப்படுத்திவிட்டு விளைநிலங்களுக்குள் புகுந்து நெற்பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன.
இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், இது குறித்து விவசாயிகள் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.







