கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

திமுக தலைவராக பொறுப்பேற்று 5ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  திமுகவின் தலைவரும்,  முன்னாள் முதலமைச்சராகவும் இருந்த கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு…

திமுக தலைவராக பொறுப்பேற்று 5ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

திமுகவின் தலைவரும்,  முன்னாள் முதலமைச்சராகவும் இருந்த கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து திமுக தலைவராக 2018 ஆகஸ்ட் 28 ஆம் தேதி மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

திமுக தலைவராக பொறுப்பேற்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் மனைவி துர்கா ஸ்டாலினுடன் தாயார் தயாலு அம்மாவிடம் ஆசி பெற்றார்.

பின்னர் அங்கிருந்து சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் தொண்டர்களையும், தொ.மு.ச. நிர்வாகிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.