குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் திருத்தேர் வீதி உலா!

தென்காசி மாவட்டம் பொதிகை மலை அடிவாரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குற்றாலநாதர் கோயிலில் திருத்தேர் வீதி உலா நடைபெற்றது.  குற்றாலநாதர் சுவாமி திருக்கோயிலில் வருடம் தோறும் ஐப்பசி மாத விசு திருவிழாவானது வெகு சிறப்பாக…

தென்காசி மாவட்டம் பொதிகை மலை அடிவாரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குற்றாலநாதர் கோயிலில் திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. 

குற்றாலநாதர் சுவாமி திருக்கோயிலில் வருடம் தோறும் ஐப்பசி மாத விசு திருவிழாவானது வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடத்திற்கான ஐப்பசி விசுத் திருவிழா கடந்த 9-ம் தேதி குற்றாலநாதர் கோயிலில் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கிய நிலையில், வருகின்ற 18ஆம் தேதி வரை 10 நாட்கள் ஐப்பசி விசு திருவிழாவானது மிக சிறப்பாக நடைபெற உள்ளது.

அந்த வகையில், 5-ம் திருநாளான இன்று திருத்தேர் வீதி உலா தொடங்கியது. 4 தேர்கள் அடங்கிய இந்த திருத்தேர் வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

முதல் தேரில் விநாயகப் பெருமானும்,  இரண்டாவது தேரில் முருகப்பெருமானும், மூன்றாவது தேரில் குற்றாலநாதரும்,  நான்காவது தேரில் குழல்வாய்மொழி  அம்மனும் உள்ளிட்ட நான்கு தெய்வங்கள் அடங்கிய சிவ குடும்பம் என்று சொல்லக்கூடிய நான்கு தெய்வங்கள் ஒரு சேர நான்கு தேர்களில் தனித்தனியாக வீதி உலா வந்தனர்.

இந்த திருத்தேர் பவனி உலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.