சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் குற்றாலம் – அருவிகளில் கட்டுக்கடங்காத கூட்டம்: களை கட்டியது குற்றாலம்!

தென்காசி, குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை கட்டுக்கடங்காமல் உள்ளது.  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு…

தென்காசி, குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை கட்டுக்கடங்காமல் உள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து, குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது வெள்ளம் குறைந்ததால் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவ மழை இந்தாண்டு ஜூன் மாதத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சரியாக பெய்யவில்லை. இதனால் ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டிய குற்றால சீசன் தொடங்காமல் இருந்தது. இதன் காரணமாக குற்றாலத்தை வாழ்வாதாரமாக நம்பி இருந்த ஏராளமானோர் ஏமாற்றம் அடைந்தனர்.

வழக்கமாக ஜூன் மாதத்தில் கேரளாவில் பருவ மழை தொடங்கியதுமே குற்றலாத்தில் பயணிகளின் வருகையும் ஆரம்பித்துவிடும். ஆனால் ஜூன் மாதம் முழுவதுமே தென்மேற்கு பருவ மழை பொய்த்துபோனதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் காணப்படவில்லை.

ஜூலை மாதம் பிறந்த உடனேயே மழை கொட்டத் தொடங்கியது, கேரளா மற்றும் தென்காசி, குற்றலாம் பகுதியிலும் நல்ல மழை பெய்தது. குறிப்பாக மேற்குதொடர்ச்சிமலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் கடந்த இரு நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை முதல் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனைதொடர்ந்து, அருவிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.