தைரியமான அரசியல்வாதி… #RahulGandhi-க்கு புகழாரம் சூட்டிய சைஃப் அலிகான்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நடிகர் சைஃப் அலிகான் புகழ்ந்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல ஹிந்தி நடிகர் சைஃப் அலிகான். இவர் தற்போது ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் ஆகியோர்…

Courageous politician... Saif Ali Khan praised Rahul Gandhi!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நடிகர் சைஃப் அலிகான் புகழ்ந்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல ஹிந்தி நடிகர் சைஃப் அலிகான். இவர் தற்போது ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘தேவரா’ என்ற பான் இந்தியா படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இதன் புரோமோஷன் தொடர்பாக சைஃப் அலிகான் நேர்காணல் ஒன்றில் பேசினார். அந்த நேர்காணலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து அவர் கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேர்காணலில் சைஃப் அலிகான் எனக்கு தைரியமான அரசியல்வாதியை பிடிக்கும் எனக் கூறினார். அதற்கு நேர்காணல் செய்தவர், எதிர்காலத்தில் இந்தியாவை முன்னெடுத்து செல்லும் தைரியமான அரசியல்வாதி யார்? மோடியா, ராகுல் காந்தியா? எனக் கேட்டார். அதற்கு அனைவரும் தைரியமானவர்கள் தான். ஆனால் ராகுல் காந்தி நடந்துகொள்ளும் விதம் மிகவும் பிடித்துள்ளது. ஒரு சமயத்தில் ராகுல் காந்தி செயலும் பேச்சும் விமர்சிக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது தனது கடின உழைப்பினால் அதையெல்லாம் மாற்றியிருக்கிறார்” என்றார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.