இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உயிரிழப்புப் படைத் தாக்குதல் நடத்த உள்ளதாக அல் கொய்தா தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
நபிகள் நாயகம் தொடர்பாக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய பாஜகவைச் சேர்ந்த நுபுர் ஷர்மாவுக்கு Mujahideen Ghazwatul Hind பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அவரது வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி, மும்பை, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய இடங்களில் உயிரிழப்புப்படை தாக்குதல் நடத்தப்படும் என்று அல் கொய்தா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள கடிதத்தில், “டெல்லி, மும்பை, உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் நாங்கள் உயிரிழப்புப் படை தாக்குதல்களை நடத்துவோம். அந்தப் பகுதிகளைச் சேர்ந்த காவி பயங்கரவாதிகள் தங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உயிரிழப்புப்படை தாக்குதல் நடத்தபடும் என அல்கொய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-மணிகண்டன்







