தற்போதைய ஐபில் சாம்பியனாக வெற்றி வாகை சூடியுள்ள சிஎஸ்கே மீது எண்ணற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அனைத்தையும் தவிடு பொடியாக்கியுள்ளது சிஎஸ்கே.
ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சென்னை, குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயித்த ரன்களை மழைக்கு நடுவே ஆட்டம் தடைபட மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி பதிவு செய்தது.

CSK மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் :
ஐபிஎல் சிறந்து பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் பெரிதளவில் குஜராத் அணி பாராட்டப்பட்டது. சுப்மன் கில், முகமது சமி, ரசீத் கான் என ஃபுல் ஃபார்மில் ஆடிய வீரர்களால் குஜராத் அணி பேசு பொருளானது. ஆனால் மறுபுறம் சிஎஸ்கே அணி மீது தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
சிஎஸ்கே வீரரான டேவன் கான்வேயின் ரன் ரேட் மிகக் குறைவாக உள்ளது. இவர் Slow-வா ஆடுவார். தங்களது அணிக்கு இவர் வேண்டாம் என பல அணிகளால் நிராகாரிக்கப்பட்டவர் டேவன் கான்வே.
அஜிக்கியா ரஹானே :
அஜிக்கியா ரஹானே ஒரு டெஸ்ட் பிளேயர். ரஹானேவின் வயதை காரணம் காட்டி பல அணிகள் அவரை ஏலம் எடுக்கவே தயங்கின.
அதேபோல அம்பத்தி ராய்டு ஃபார்மிலேயே இல்லை. தேஷ்பாண்டே 4 ஓவர்களுக்கு குறைந்தது 40 ரன்களை விட்டுக்கொடுப்பவர், தீக்ஷனா கைக்கு வந்த பந்தினைக் கூட விட்டு விடுவார்.., கிட்டத்தட்ட 16 கோடிக்கு ஏலம் எடுத்த பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விளையாடமல் நாடு திரும்பினார்., பதிரனா, ஆகாஷ் சிங் ஆகியோருக்கு பந்துவீச்சில் அனுபவமே இல்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் சிஎஸ்கே அணி மீது வைக்கப்பட்டன.
தங்கள் அணி மீது முன்வைக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களையும் தவிடு பொடியாக்கி 2023ம் ஆண்டின் ஐபிஎல் கோப்பையை தட்டித் தூக்கி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது சென்னை அணி. கேப்டன் கூல் தோனியை போல சிஎஸ்கே அணியும் வெற்றியின் மூலம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது.








