தமிழ்நாடு முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., B.Arch., படிப்புகளில் சேரும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி. 24ம் தேதி வரை நடைபெறுகிறது. அரசு பள்ளிகளில் படித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் 28 பேர், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் 3 பேர், விளையாட்டு பிரிவை சேர்ந்தவர்கள் 89 பேர் மற்றும் தொழிற்கல்வி 2 பேர் என மொத்தம் 124 பேர் மட்டும் இக்கலந்தாய்வில் பங்கேற்கவுள்ளனர்.
தொழிற்கல்வி படித்த அரசு பள்ளி மாணவர்களுக்கும் தொழிற்கல்வி பொது மாணவர்களுக்கும் 25ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறுகிறது.பொதுப்பிரிவினருக்கு மொத்தம் 4 சுற்றுகளாக நடைபெறும் இக்கலந்தாய்வு அக்டோபர் 23ம் தேதி நிறைவுபெறுகிறது.
கடந்த ஆண்டு வரை கலந்தாய்வு தொடக்கத்தில் முன் பணம் செலுத்த வேண்டும் என்கிற நடைமுறை இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டு உள்ளது.







