431 பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., B.Arch., படிப்புகளில் சேர நாளை முதல் கலந்தாய்வு தொடங்குகிறது.
நாளை முதல் வரும் 24-ம் தேதி வரை சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இட ஒதுக்கீடு, விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் பங்கேற்கின்றனர்.
பின்னர் 25-ம் தேதி முதல் அக்டோபர் 23-ம் தேதி வரை பொது, தொழிற் பிரிவினருக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறுகிறது.
இடங்கள் ஒதுக்கப்பட்டவர்கள் அடுத்த 7 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தாவிட்டால், அந்த இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும் என்று TNEA அறிவித்துள்ளது.
சிறப்புப்பிரிவு, பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆகியவை முழுவதும் ஆன்லைனிலேயே நடைபெறுகிறது. கிராமப்புற மாணவர்கள் மாவட்டந்தோறும் உள்ள 110 TFC மையங்களுக்கு சென்று கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று TNEA அறிவித்துள்ளது.
Engineering கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலில் குறைகள் இருப்பின், இன்று இரவுக்குள் விண்ணப்பிக்கலாம். தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்று, ஆனால் 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்காத அரசுப் பள்ளி மாணவர்களும் இன்று இரவுக்குள் விண்ணப்பிக்கலாம்.
http://www.tneaonline.org இணையதளத்தில் குறைகள், திருத்தங்கள் இருப்பின் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.








