முக்கியச் செய்திகள் தமிழகம்

கவுன்சிலர்களுக்கு உதவியாளர்களை நியமிக்க வேண்டும்: மேயரிடம் கோரிக்கை

நேரமில்லா நேரத்தின் போது சென்னை மாநகர மாமன்ற கூட்டத்தில் மேயரிடம் கோரிக்கைகளை அடுக்கிய மாமன்ற உறுப்பினர்கள்.

மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்த மேயர் மற்றும் துணை மேயர், செப்டம்பர் மாதத்தின் சென்னை மாநகராட்சி சாதாரண மாதாந்திர கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது இதன் நேரம் இல்லா நேரத்தின் போது மாமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்கான கோரிக்கைகளை மேயரிடம் பட்டியலிட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முதலில் பேசிய வார்டு எண் 145 உறுப்பினர், சத்தியநாதன், ஒவ்வொரு துறையைப் பார்க்கும் அரசு அதிகாரிகளுக்கு உதவியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள் அதே போல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைத்து துறைகளிலும் மக்களின் பிரச்சினைகளைக் கேட்டு அறிந்து நடவடிக்கை எடுக்கும் மாமன்ற உறுப்பினர்களுக்கும் உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இதற்குப் பதில் அளித்த மேயர் பிரியா ராஜன் அதற்கான சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு மாமன்ற உறுப்பினர்களுக்கு உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சென்னை மாநகராட்சி மாமன்ற ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், “சென்னை மாநகராட்சி மேயர் துணைமேயரை போல மண்டல தலைவர்கள் தங்களது மண்டலங்களில் உள்ள பொதுமக்கள் பிரச்சனைகளைக் கேட்கப் பயணிக்க வேண்டி உள்ளதால் மண்டல குழு தலைவர்களுக்கும், 15 உறுப்பினர்களைக் கொண்டு செயல்படும் நிலைக் குழு தலைவருக்கும் நியமன குழு உறுப்பினர்களுக்கும் வாகன ஏற்பாடு செய்யத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய சென்னை மாநகர துணை மேயர் ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம் கோரிக்கையை ஏற்று அடுத்த கூட்டத்தில் இது சம்பந்தமான தீர்மானத்தை அவரே கொண்டு வந்து அந்த தீர்மானம் நிறைவேறும் பட்சத்தில் அதனை அரசுக்கு அனுப்பலாம் என்றார்.

மேலும் பேசிய 105 ஆவது வார்டு உறுப்பினர் அதியமான், “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிங்கப்பூர் நகரை எடுத்துக்காட்டாகக் கொண்டு பல்வேறு திட்டங்களை நாம் செயல்படுத்தி வருகிறோம். அந்த அளவில் மாமன்ற உறுப்பினர்களை எஜுகேஷன் மற்றும் அப்சர்வேஷன் டூர் காக சிங்கப்பூர் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்குப் பதில் அளித்த துணை மேயர் மகேஷ் குமார் “இது சம்பந்தமாக மாண்புமிகு மேயர் ஏற்கனவே நகராட்சி நிர்வாக துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். விரைவில் அவரிடமிருந்து பதில் வரும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெருமாள் முருகனின் வரிகளில் அம்பேத்கருக்கு கர்நாடக இசையில் T.M. கிருஷ்ணாவின் பாடல்!

எல்.ரேணுகாதேவி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகள் வாபஸ்?

Niruban Chakkaaravarthi

கூடா நட்பு கேடாய் முடியும் என ஓ.பி.எஸ்ஸிடம் சொன்னேன்-டி.டி.வி. தினகரன்

Web Editor