சட்டபேரவையில் எங்கள் கருத்துகளை முழுமையாக தெரிவிக்க முடியவில்லை என
கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை புலியகுளத்தில் இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவருக்கும் மே தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். கோவை தெற்கு தொகுதியில் ஒவ்வொரு பகுதிக்கும் இலவச மருத்துவ முகாமை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் சட்டபேரவையில் ஆளுங்கட்சிக்கு எந்த வித சங்கடங்கள் வர கூடாது என்பதில்
சபாநாயகர் தெளிவாக இருப்பதாகவும், எங்களால் முழுமையாக கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பில்லாமல் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் நாங்கள் பேசியது நேரலையில் முழுமையாக வருவதில்லை.கேட்டால் தொழில்நுட்ப கோளாறு என்கிறார்கள். குறிப்பாக சபை குறிப்பில் நீக்கம் தொடர்பான கருத்துகளை விட்டுவிட்டு அனைத்தும் ஒளிப்பரப்ப வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இலங்கைக்கு, தமிழக அரசு உதவ வேண்டும் என்பதை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனால் அதே வேளையில் முள்ளிவாய்க்காலில் நடந்த சம்பவம்களுக்கு யார் காரணம் எனவும், அன்று நடந்த உயிரிழப்பு சம்பவங்களையும் நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும்
என்றும் கூறினார்.
மேலும் ஒவ்வொரு பெண் தொழில் முனைவோர்களையும் தமிழக அரசு ஊக்குவிக்க
வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.








