ஊழல் வழக்கு – சீனாவின் முன்னாள் சட்ட அமைச்சருக்கு மரண தண்டனை

சீனாவின் முன்னாள் சட்ட அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உயர் அதிகாரியான ஃபு ஸெங்குவாவுக்கு ஊழல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, சீனா டெய்லி ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜிலின்…

சீனாவின் முன்னாள் சட்ட அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உயர் அதிகாரியான ஃபு ஸெங்குவாவுக்கு ஊழல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சீனா டெய்லி ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜிலின் மாகாணத்துக்கு உள்பட்ட ஜாங்சூன் பகுதியில் அமைந்துள்ள மக்கள் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, முன்னாள் சட்ட அமைச்சருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.

ஃபு பெய்ஜிங் மாநகராட்சியின் பொது பாதுகாப்பு அதிகாரி, பொதுப் பாதுகாப்பு துணை அமைச்சர் மற்றும் சட்டத் துறை அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, தனது குடும்பத்தினர் மூலமாகவோ அல்லது அவரோ பல்வேறு ஊழல்களை செய்திருப்பதும், அதன் மூலம் லாபம் அடைந்திருப்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊழல் புரிந்தது மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்டக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த மரண தண்டனை ஃபு ஸெங்குவாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.