முக்கியச் செய்திகள் தமிழகம்

வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருட்கள்!

பண்டைய கால நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண்ணால் ஆன முத்திரைக் கருவி உலோக காசுகள் முழுமையான வளையல்கள் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டறியப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே வைப்பற்றின் வடகரையில் அமைந்துள்ள
உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16-ம்
தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து
மேற்கொள்ளப்பட்ட மேற்பறப்பு அகழாய்வின் மூலம் இந்த தொல்லியல் மேட்டில்
நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இங்கு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தமிழக அரசு இங்கு அகழாய்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில் வெம்பக்கோட்டை அகழாய்வுப் பணியில் அவ்வப்போது பல்வேறு பொருட்கள் கிடைத்த நிலையில் இதற்கு முன்னால் சுடு களிமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய குடுவை மற்றும் யானைத் தந்தத்தினால் செய்யப்பட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கழுத்தில் அணியப்பட்ட பதக்கம் புகைக்கும் குழாய், அழகிய வேலைபாடுகளுடன் கூடிய தங்க அணிகலன் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டறிப்பட்டது.

 இதனைத் தொடர்ந்து இன்று பழங்காலத்தில் பண்டைய கால மக்கள் கலை ஆர்வத்தை அறிந்து கொள்ளும் வகையில் நுணுக்கமான வேலைப்பாடுகள் அடங்கிய சுடு மண்ணால் செய்யப்பட்ட முத்திரையிடும் கருவி உலோகத்தினர் ஆன உருவம் பதித்த காசுகள் அழகிய வேலைப்பாடுடன் கூடிய உலோகத்தினால் ஆன முழுமையான வளையல்கள் என பல்வேறு கலைநயமிக்க பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இது கல்வாராய்ச்சி மேற்கொள்ளும் பணியாளர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கு நடக்கும் அகழாய்வுப் பணியின்போது பல்வேறு அரிய பொருட்கள் கிடைக்கப் பெற்று வருகின்றன.

இதன்மூலம் இந்தப் பகுதியில் வாழ்ந்த மனிதர்கள் கலைநயம் மிக்கவர்களாக
இருந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. இந்தக் பொருட்கள் எத்தனை
ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திற்குட்பட்ட பொருளாக இருக்குமா என்பது குறித்தது
என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்தடுத்து பல கலைநயம்மிக்க பொருட்கள் இப்பகுதியில் கண்டறியப்படுவது இப்பகுதியில் இப்பகுதியின் கலைத்திறன் மற்றும் தொன்மையையும் அறிய முடிகிறது என்று இப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பேசி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஏமாற்றி திருமணம் செய்து 15க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பண மோசடி செய்த திருநங்கை

EZHILARASAN D

’பப்ஜி’ மதனுக்கு ஜூலை 3 வரை நீதிமன்ற காவல்!

Gayathri Venkatesan

ஸ்புட்னிக் வி தடுப்பூசி தொடங்கும் பணியை நிறுத்தவில்லை: ரெட்டி ஆய்வகம் விளக்கம்

Vandhana