சென்னையில் தனியார் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள சென்னை பல்கலைகழக விடுதியில் 900 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேலைக்கு செல்பவர்களும், பொதுமக்களும் தெருமுனைகளில் இருக்கும் தற்காலிக மருத்துவ முகாம்களில் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.
கொரோனா பரவல் குறித்து சென்னை மாநகராட்சி உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், உயிரிழப்புகளை தவிர்ப்பதுதான் முக்கிய இலக்கு என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார். இஸ்ரேலில் அனைவரும் கொரோனா அச்சம் இல்லாமல் இருக்க காரணம் தடுப்பூசி தான் என கூறிய பிரகாஷ், அந்த நிலையை நாமும் அடைய அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.







