முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு முழுவதும் ஓரளவு குறைந்த கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 30,215 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினத்தில், 30,580 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை தற்போது சற்று குறைந்துள்ளது. இன்றைய தினத்தில் மட்டும் 31,64,205 பேருக்கு மாநிலம் முழுவதும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேற்குறிப்பிட்ட தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

இந்த மொத்த பாதிப்பில், 18,46,198 பேர் ஆண்களும், 13,17,969 பெண்களும், 38 மாற்று பாலினத்தவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல இன்று 24,639 சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 29,20,457 பேர் குணமடைந்துள்ளனர்.

அதேபோல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,264 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பாதிப்பை பொறுத்த அளவில், சென்னையில் அதிகப்பட்சமாக 6,296 பேரும் கோவையில் 3,786 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பிலும் சென்னை முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள விவரம் :-

தமிழ்நாடு முழுவதும் இதுவரை 9.06 கோடி (9,06,14,884) டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18-44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 4,74,27,240 (4.74 கோடி ) டோஸ் தடுப்பூசியும்

45 – 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 2,63,96,264 (2.63 கோடி ) டோஸ் தடுப்பூசியும்

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 1,19,43,744 (1.19 கோடி ) டோஸ் தடுப்பூசியும்

15 – 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 25,75,570 (25.75 லட்சம் ) டோஸ் தடுப்பூசியும்

முன்களப்பணியாளர்கள் 13,01,710 (13.01 லட்சம் ) டோஸ் தடுப்பூசியும்

மருத்துவ பணியாளர்கள் 9,70,356 (9.70 லட்சம்) டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

’செம த்ரில்லரா இருக்கும் போலிருக்கே..’ வெளியானது சிம்புவின் ’மஹா’ டிரைலர்

Gayathri Venkatesan

கங்கனா ரனாவத் ட்விட்டர் கணக்கு முடக்கம்

Halley Karthik

டோக்கியோ ஒலிம்பிக்கில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

Jeba Arul Robinson