நாடு கடத்தப்படுவதை எதிர்த்து முறையிட ஜூலியன் அசாஞ்சேவுக்கு அனுமதி

அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து முறையிட ஜூலியன் அசாஞ்சேவுக்கு அனுமதியளித்துள்ளது பிரிட்டன் நீதிமன்றம். விக்கிலீக்ஸ் எனும் ஊடகத்தை நடத்தி வரும் ஜூலியன் அசாஞ்சே, கடந்த 2010 ஆண்டு அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதல் வீடியோவை…

அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து முறையிட ஜூலியன் அசாஞ்சேவுக்கு அனுமதியளித்துள்ளது பிரிட்டன் நீதிமன்றம்.

விக்கிலீக்ஸ் எனும் ஊடகத்தை நடத்தி வரும் ஜூலியன் அசாஞ்சே, கடந்த 2010 ஆண்டு அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதல் வீடியோவை வெளியிட்டார். இந்த தாக்குதலில் ராய்ட்டர்ஸ் ஊடகவியலாளர் 2 பேர் உட்பட 12 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

மட்டுமல்லாது பல ராணுவ ரகசியங்களையும் வெளியிட்டது அவருடைய விக்கிலீக்ஸ் ஊடகம். இந்நிலையில் இவர் தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது. இந்த பின்னணியில் அவரை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி அமெரிக்கா பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.

ஆனால், அவரை தற்போதைய சூழலில் அசாஞ்சே அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டால் சிறையிலேயே உயிரை மாய்த்துக் கொள்வார் என கூறி அமெரிக்காவின் கோரிக்கையை பிரிட்டன் நீதிமன்றம் நிராகரித்தது.

இதனையடுத்து அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் அமெரிக்கா மேல் முறையீடு செய்தது. இதில் அசாஞ்சேவை ஒப்படைக்க நீதிமன்றம் அனுமதித்து. இந்த சூழலில், அசாஞ்சே தான் நாடு கடத்துவதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடவும் பிரிட்டனின் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக அசாஞ்சே அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டால் அவர், மனித உரிமையின் அடிப்படையில் நடத்தப்படுவார் என அந்நாடு உறுதியளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.