நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார்.
இன்று மாலை 04.30 மணிக்கு பிரதமர் மோடி மிக முக்கிய ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக பிரதமர் ஆலோசிக்க இருப்பதக தெரிகிறது. இதில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும், தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்துவது, ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல, தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.







