கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் ஓயவில்லை என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்த சுதந்திர தினம் முக்கியத்துவம் பெறுகிறது. 75 ஆண்டு கால பயணத்தில் நாடு பெருமிதம் கொள்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனாவுக்கு எதிரான போர் இன்னமும் ஓயவில்லை என்று தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள நாட்டு மக்கள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய அரசு அறிவித்துள்ள பல திட்டங்களில் ககன்யான் திட்டம் முக்கியமானது என்றும் எளிதாக தொழில் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் தனது சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.